தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் 69வது சிறப்புப் பட்டிமன்றம்

தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் 69வது சிறப்புப் பட்டிமன்றம்

கடந்த 13ம் தேதி மாலை சிலோன் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடந்த சுவையான பட்டிமன்றத்தின் தலைப்பு ‘மிகவும் நிம்மதியாக இருப்பவர்கள் மாத ஊதியம் பெறுபவர்களா? சொந்தத் தொழில் செய்பவர்களா?” மாத ஊதியம் பெறுபவர்களே என்ற அணியில் முனைவர் ராஜி சீனிவாசன், திருமதி அகிலா, திரு எம்.ஜே அஜ்மீர்அலி ஆகியோரும் சொந்தத் தொழில் செய்பவர்களே என்ற அணியில் முனைவர் எஸ்.தாமோதரன், திருமதி சித்ரா, திரு சேவகன் ஆகியோரும் வாதிட நடுவராக தமிழ்முரசின் நல்லாசிரியர் விருதை 3 முறை பெற்ற திரு வீர கணேசன் செயல்பட்டார். ஆணிவேராக அவர்கள் வைத்த கருத்துக்கள் இதுதான். மற்றவர்கள் பொறாமைப் படும் அளவுக்கு கார், பங்களா உல்லாச வாழ்க்கை இருந்தாலும் நிம்மதி இருப்பதில்லை. தலைப்பு நிம்மதி மட்டும்தான். எனவே மாத ஊதியம் பெறுபவர்களே நிம்மதியாய் இருக்கிறார்கள் என்றனர். மாற்று அணியினர் வலுவான ஒரு கருத்தை முன்வைத்தார்கள். எங்கள் நிம்மதியை இழந்துதான் நாங்கள் சொந்தத் தொழில் செய்கிறோம். ஆனால் உங்களைப் போன்ற மாத ஊதியம் பெறுபவர்களுக்கு ஊதியம் தருபவர்களே நாங்கள்தான் அந்த நிம்மதியை நினைத்து எங்கள் பிரச்சினைகளை நாங்கள் மறந்துவிடுகிறோம் என்றார்கள்.நடுவர் தன் தீர்ப்பில் இரண்டு கருத்துக்களையும் ஒப்பிட்டு ஒரு வலுவான கருத்தை முன்வைத்தார். சொந்தத் தொழில் செய்பவர்கள் நொடித்துப் போனால் அந்த வலி மொத்தக் குடும்பத்தையும் தாக்கி குடும்பத்தையே அழிக்கிறது ஆனால் மாத ஊதியம் பெறுபவர்களுக்கோ மாற்று வேலை கிடைத்துவிடுகிறது அவர் பாதிக்கப் பட்டாலும் குடும்பம் பாதிப்படைவதில்லை எனவே மாத ஊதியம் பெறுபவர்களே நிம்மதியாக இருக்கிறார்கள் என்று தீர்ப்பளித்தார்.

அடுத்த நிகழ்ச்சி நவம்பர் 25 ஞாயிறு நடைபெறும் தலைப்பு ‘பெரும்பாலா பிள்ளைகள் அம்மா செல்லமா? அப்பா செல்லமா?’ இந்த நிகழ்ச்சி மாணவர்கள் பங்குபெறும் நிகழ்ச்சி.

தொகுப்பு: யூசுப் ராவுத்தர் ரஜித்
படங்கள்: திரு அருமைச் சந்திரன்