தமிழ் முரசின் நல்லாசிரியர் விருது / Tamil Teachers Award Ceremony

தமிழ் முரசின் நல்லாசிரியர் விருது 2012    

தமிழ் முரசு அதன் வருடாந்திர நல்லாசிரியர் விருதை 1-ஆம் தேதி செப்டம்பர் 2012ல் நடத்தியது.

மாணவர்களாலும் சக ஆசிரியர்களாலும் பரிந்துரை செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு விருதுகளை தமிழ் முரசின் தலைவர் திரு எஸ் சந்திரதாஸ் அவர்கள் வழங்கினார். இந்த நிகழ்வின் சிறப்பு அம்சமாக தமிழ் முரசின் 10ஆம் ஆண்டின் நிறைவையோட்டி வாழ்நாள் நல்லாசிரியர் விருதும் வழங்கப்பட்டது. இந்த விருது முதல் ஆண்டாக நடைபெறுவதை முன்னிட்டு, மூன்று ஓய்வுபெற்ற தமிழாசிரியர்களுக்கு வழங்கப்பட தமிழ் முரசும் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கமும் முடிவு செய்துள்ளன. அடுத்த ஆண்டிலிருந்து ஒரு விருது மட்டுமே வழங்கப்படும். இம்மதிப்பிற்குரிய விருதினை பெற்றவர்கள் முனைவர் சுப. திண்ணப்பன் வயது 77, திரு மு தங்கராசு, வயது 78, திரு பா. கேசவன், வயது 74. அவர் தமிழர் பேரவையின் முன்னாள் தலைவர் ஆவார்.

திரு பா கேசவன் எளிய இலக்கணம் என்ற வானொலி நிகழ்ச்சியை எழுதிப் படைத்தவர். அவர் எழுதிய ‘இலகு தமிழில் இனிக்கும் இலக்கணம்’ என்ற நூல் தமிழக அரசின் சிறந்த நூலூக்கான பரிசை 2005ம் ஆண்டு பெற்றது. தேசிய கல்விக் கழகத்தில் தமிழ்த் துறையில் 17 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற டாக்டர் சுப திண்ணப்பன், 500க்கு மேற்பட்ட தமிழரலல்லாதவருக்குத் தமிழ் கற்பித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் தமிழர் பேரவையின் தலைவர முனைவர் இரா தேவேந்திரன், பொதுச் செய்லாளர் திரு வெ பாண்டியன் அவர்களும் கலந்துகொண்டனர். தமிழர் பேரவையும் தமிழ் முரசும் சேர்ந்து 10 ஆண்டுகளுக்கு முன் இவ்விருதினை தொடக்கி வைத்தன. சிங்கப்பூரில் தமிழ் வளர்ச்சிக்காக, தமிழர் பேரவை தம் முழுமையான ஆதரவை இந்நிகழ்ச்சிக்கு வழங்கி வருகிறது.

மாணவமணிகளுக்கு முன்மாதிரியாக விளங்க வெற்றி பெற்ற தமிழாசிரியர்களையும் பள்ளிகளையும் தமிழர் பேரவை மனமார வாழ்த்துகின்றது. இந்நிகழ்ச்சிக்கு தங்கள் நல்லாதரவை அளித்த எல்லா சமூகத்தினரையும் தமிழர் பேரவை வாழ்த்துகின்றது.

வெற்றியாளர்கள்

வாழ்நாள் நல்லாசிரியர் விருது
திரு பா. கேசவன்
முனைவர் சுப. திண்ணப்பன்
திரு மு. தங்கராசன்

தொடக்கப் பள்ளி பிரிவு
முதல் பரிசு திருமதி சாந்தா சுப்பையா
செயின்ட் ஆண்டனிஸ் தொடக்கப் பள்ளி
2ஆம் பரிசு குமாரி கோகிலவாணி வத்துமலை
ஆங்கிலோ-சீனத் தொடக்கப் பள்ளி
3ஆம் பரிசு திரு சாய்ராம்பிரபு பாலசுப்பிரமணியம்
யூ டி தொடக்கப் பள்ளி
தகுதிப் பரிசு திருமதி சுதா திவாகரன்
டாச்சோங் தொடக்கப் பள்ளி
தகுதிப் பரிசு திருவாட்டி தேவிகா தனபால்
பயனியர் தொடக்கப் பள்ளி

உயர்நிலைப் பள்ளி பிரிவு
முதல் பரிசு குமாரி அஸ்மத் பீவி
சிராங்கூன் கார்டன்ஸ் உயர்நிலைப் பள்ளி
2ஆம் பரிசு திருமதி சாந்தா சிவா
நார்த் வியூ உயர்நிலைப் பள்ளி
3ஆம் பரிசு திருவாட்டி செல்லத்தாய்
கிரீன்ரிட்ஜ் உயர்நிலைப் பள்ளி

தொடக்கக் கல்லூரி பிரிவு
முதல் பரிசு திருமதி மீரா சாமிநாதன்
ராஃபிள்ஸ் கல்வி நிலையம்
2ஆம் பரிசு திருவாட்டி மல்லிகா
யீஷுன் தொடக்கக் கல்லூரி
3ஆம் பரிசு திரு தாஸய்யா விக்டர் ஜான்

தேசிய தொடக்கக் கல்லூரி பரிசுகள்
வாழ்நாள் சாதனையாளர்களுக்கு சென்னை சென்று வர விமான டிக்கெட்டும் கேடயமும் பரிசுகளாக வழங்கப்பட்டன.

தொடக்கப்பள்ளி, உயர்நிலை, தொடக்கக் கல்லூரி ஆகிய மூன்று பிரிவுகளிலும் நல்லாசிரியர் விருதை வென்ற ஆசிரியர்களுக்கு $1,000 ரொக்கமும் கேடயமும் பரிசுகளாகக் கிடைத்தன.

முதல் பரிசை வென்ற ஆசிரியர்களை முன்மொழிந்த வர்களுக்கு $250 ரொக்கம் பரிசாகக் கிடைத்தது.
இரண்டாம் பரிசு பெற்றவருக்கு $500 ரொக்கம், கேடயமும் அவரை முன் மொழிந்தவருக்கு $150 ரொக்கமும் பரிசாகக் கிடைத்தன.

மூன்றாம் பரிசை வென்றவருக்கு $250 ரொக்கம், கேடயமும் அவரை முன் மொழிந்தவருக்கு $100 ரொக்கமும் பரிசாகக் கிடைத்தன.

தகுதிப் பரிசு பெற்றவருக்கு $100 ரொக்கம், கேடயமும் அவரை முன் மொழிந்தவருக்கு $50 ரொக்கமும் பரிசாகக் கிடைத்தன. பரிசுகளை வென்ற அனைத்து ஆசிரியர்களது பள்ளிகளுக்கும் கேடயங்கள் வழங்கப்பட்டன.

வசந்தம் தமிழ்ச் செய்தி : நல்லாசிரியர் விருதுகள்
ஆசிரியப் பணியைச் சிறப்பாகச் செய்வோருக்கு நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவித்து வருகிறது தமிழ் முரசு நாளிதழ். பத்தாவது ஆண்டாக நடைபெறும் விருது விழாவுக்கு மூன்று பிரிவுகளின் கீழ் 300 பேர் முன்மொழியப்பட்டிருந்தனர்.

 

TAMIL TEACHERS AWARD CEREMONY

Tamil Murasu held its annual Most Aspiring Tamil Teachers award on 1st September 2012.

A number of inspiring Tamil Teachers nominated by either their Students or fellow Teachers received awards from Mr S Chandra Das, Chairman of Tamil Murasu. One of the highlights of the event was the Lifelong Achievement Award which was instituted by Tamil Murasu as part of its 10th anniversary of these Awards. As this was the 1st year, 3 retired Teachers received this award. From next year, only 1 such award will be presented.

Dr S Thinappan, Mr Thangarasu and Mr P Kesavan were the recipients of these distinguished awards. It is to be noted that Mr P Kesavan was a past President of Tamils Representative Council.

Dr R Theyvendran (President) and Mr V Pandiyan (Gen Secretary) TRC attended this event. TRC together with Singapore Tamil Teachers Union and Tamil Murasu were the founding members of these awards launched 10 years ago. As part of its efforts in promoting Tamil in Singapore, TRC continues to be a strong supporter of this event.

TRC congratulates all winners and the Schools for giving these Teachers an opportunity to shine and make a difference to their Students. Congratulations also to all Supporters of this event as it show the strong support and appreciation of the Community towards our “Guru”.