64-வது சிறப்புப் பட்டிமன்றம்

64-வது சிறப்புப் பட்டிமன்றம்

 

தமிழ்மொழி மாதத்தின் சிறப்பு நிகழ்ச்சியாக தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் 64வது பட்டிமன்றம் பெக்கியோ சமூக மன்றத்தின் இந்திய நற்பணிக்குழுவுடன் இணைந்து ஏப்ரல் 21-ஆம் தேதியன்ற உமறுப் புலவர் தமிழ் மொழி மையத்தில் மாலை 6.30 மணியளவில் நடைபெற்றது.

முனைவர் கலைமாமணி நகைச்சுவை மாமன்னர் இளசை சுந்தரம் மற்றும் முனைவர் ரேவதி சுப்புலட்சுமி நடுவர்களாகச் செயல்பட செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு விக்ரம் நாயர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

முனைவர் சுப. திண்ணப்பனார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் திரு வி.பி. ஜோதி அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

பட்டிமன்றத்தின் தலைப்பு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு நம் செயல்பாடுகள் போதுமானது போதுமானதல்ல என்பதாகும். போதுமானது என்ற அணியில் முனைவர் ராஜி சீனிவாசன், திரு சந்தன்ராஜ் திருமதி ஜெயஸ்ரீ தாமோதரன்ஆகியோரும் போதுமானதல்ல என்ற தலைப்பில் திரு யூசுப்ராவுத்தர் ரஜித், சித்ரா ரமேஷ், திரு எம். ஜே அஜ்மீர் அலி ஆகியோரும் வாதிட்டார்கள். நிகழ்ச்சியில் திரு யூசுப் ராவுத்தர் ரஜித்தின் ‘கட்டைவிரல்’ ஆகட்டும் கல்வி என்ற சிறுகதைத் தொகுப்பு நூல் அனைவருக்கும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.