அறிவுக்கு விருந்தளித்த முத்தமிழ் விழா 2012

அறிவுக்கு விருந்தளித்த முத்தமிழ் விழா 2012

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக ஏற்பாட்டில் ஏப்ரல் 7-ஆம் தேதியன்ற சிங்கப்பூர் பலதுறைக் கல்லூரி அரங்கில் நடைபெற்ற முத்தமிழ் விழாவில் இயல், இசை, நாடகம் என முத்தமிழின் சங்கமமாய் அமைந்திருந்தது.

''என் வசீகரத் தமிழ்'' என்ற தமிழ் மொழி மாத உள்ளூர் பாடலுக்கு மெதடிஸ்ட் பெண்கள் பள்ளி மாணவிகள் நடனமாடி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தனர்.

முத்தமிழ் விழாவின் சிறப்பு விருந்தினராக செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு விக்ரம் நாயர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இவ்வருட முத்தமிழ் விழாவில், எழுத்தாளர் திரு S S ஷர்மா அவர்களுக்கு தமிழவேள்விருது வழங்கப்பட்டது.