சன்லவ் இல்லவாசிகளுக்குச் சுற்றுலாப் பரிசு / இளையர்களை செதுக்குகிறது சிற்பிகள் மன்றம் / Sun and love for elders

இளையர்களை செதுக்குகிறது சிற்பிகள் மன்றம்

14 ஏப்ரல் 2011

சன்ல்வ் இல்லவாசிகள் 30 பேருக்கு ஏப்ரல் 3-ஆம் தேதி மறக்க முடியாத நாளாக அமைந்தது.

அன்று சிற்பிகள் மன்றம் அவர்களுக்காக ஹொட் பார்க்கில் உல்லாச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. சன்ல்வ் இல்லத்தை ஓராண்டுக்கு தத்தெடுத்திருக்கும் சிற்பிகள் மன்ற உறுப்பினர்கள் அங்கு தொடர்ந்து சமூக சேவை புரிந்து வருகின்றனர். அந்த வகையில் இந்த நிகழ்ச்சி இடம்பெற்றது.

உறுப்பினர்கள் இல்லவாசிகளை ஆடல், பாடல் அங்கங்களோடு மகிழ்வித்தனர். அவர்களும் உற்சாகமாக சேர்ந்து ஆடி, பாடியது மன்றத்தினரை பெரிதும் ஊக்குவித்தது. அதன் பிறகு உறுப்பினர்கள் ஹொட் பார்க்கை அவர்களுக்கு சுற்றி காண்பித்தனர். அந்த பசுமையான சூழல் இல்லவாசிகளுக்கு நல்ல மாற்றமாகவும் மனதுக்கு இதமாகவும் அமைந்தது. நிறைவாக, சிற்பிகள் மன்றத்தினர் சுவையான உணவு பறிமாறி விருந்தளித்தனர்.

பெரும்பாலும் இளையர்களை உறுப்பினர்களாக கொண்ட சிற்பிகள் மன்றம் இந்த நிகழ்ச்சி வழி அவர்கள் சமூக சேவையில் ஈடுபட வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்தது. சிலருக்கு இது ஒரு புதிய அனுபவமாகவே அமைந்தது. நிகழ்ச்சியில் ஆடியும் உணவு பறிமாறியும் பங்களித்த தொழிற்நுட்பக்கல்லூரி மாணவி குமாரி யோகேஸ்வரி இல்லவாசிகளின் முகங்களில் மகிழ்ச்சியைக் கண்டபோது மனநிறைவு அடைந்ததாக கூறினார். பிரபலமான சிங்கப்பூர் பாடல்களைப் பாடிய உறுப்பினர் குழுவில் தன் மூன்று பிள்ளைகளோடு திருமதி தமயந்தியும் உற்சாகமாக கலந்துகொண்டார். பூங்காவை சுற்றிக்காண்பிக்கவும் உதவிய அவர், தன் பிள்ளைகள் சமூகத்தில் உள்ள வசதி குறைந்தவர்களைப் பற்றி அறிந்துகொண்டு அவர்களுக்கு உதவும் மனப்பான்மையை வளர்த்துகொள்ள இந்த நிகழ்ச்சி உறுதுணையாக அமைந்ததாக குறிப்பிட்டார்.

சுமார் 30 சிற்பிகள் மன்ற உறுப்பினர்களோடு சிக்லப் இந்திய நற்பணி செயற்குழுவின் 6 உறுப்பினர்களும் நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர்.

மன்றத்தின் நோக்கங்களில் ஒன்று இளையர்களை அர்த்தமுள்ள சமூக சேவை நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்துவது. இதனால், அவர்களின் நேரம் பயனுள்ள வழியில் செலவாகிறது என சிற்பிகள் மன்ற தலைவர் திரு மு. குணசேகரன் விளக்கினார். சிற்பிகள் மன்றம் இது போன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஏற்பாடு செய்யும் என்று அவர் தெரிவித்தார்.

Sun and love for elders

Not only did they get to walk around the Hort Park and participate in activities, they also had dinner there. This special treat for about 30 residents of Sun- love Home was set up by Sirpigal, a Tamil-language society that was formed in 2006 to encourage young people in the arts and to serve the community, earlier this month.

The home is Sirpigal's adopted charity for the year and this outing - it saw members of the Siglap Indian Activity Executive Committee joining in - was one of the many programmes organised by it to encourage its members, who are largely under the age.of 30, to engage in community work.

Sirpigal president M. Kunaseakanan said it has always been the society's objective to serve the community and to get youth members to engage in such meaningful activities. He feels this is one of the ways to get them to spend their time wisely.