பெரியார் கண்ட வாழ்வியல் விழா

 

பெரியார் கண்ட வாழ்வியல் விழா

பெரியார் சமூக சேவை மன்றம் ஏற்பாட்டில் ‘பெரியார் கண்ட வாழ்வியல்’ விழா 8-11-2009, ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு, சிராங்கூன் ரோடு, பொ. கோவிந்தசாமி பிள்ளை திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கி. வீரமணி சிறப்புரை ஆற்றினார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாகத்
தமிழர் பேரவைத் தலைவர் டாக்டர் ஆர். தேவேந்திரன்
PBM, அமெரிக்காவின் பெரியார் பன்னாட்டு மையம் இயக்குநர் டாக்டர் சோம இளங்கோவன் கலந்துகொண்டனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக் கழகப் பேராசிரியர் இலக்குவன் தமிழ் “பெரியார் சேவை” விழா இதழை வெளியிடப்பட்டது. தமிழ்ப் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விழாவில் பரிசு வழங்கப்பட்டது. தேசிய நூலக வாரிய மூத்த அதிகாரி திருமதி புஷ்பலதாவுக்கு “பெரியார் விருது” வழங்கப்பட்டது.