கல்வி உபகார நிதி வழங்கும் விழா 2009 / Bursary Awards 2009

கல்வி உபகார நிதி வழங்கும் விழா 2009            

இந்திய மாணவர்கள் கல்வியில் சிறக்க வேண்டும்: தமிழர் பேரவை

(தமிழ் முரசு, 4/1/2009)

சமீபத்தில் ஒரு விபத்தில் தம் தந்தையை இழந்த ரஞ்சனி பாண்டியனின் (12) படிப்புச் செலவுகளை அவரது தாய்தான் பார்த்துக்கொள்கிறார். குடும்பச் சுமையைத் தாங்கி வந்த ரஞ்சனியின் தாயார் திருமதி லத்திக்காவுக்கு (48) தமிழர் பேரவை தம் மகளுக்குத் தந்த கல்வி நிதி சற்று ஆறுதலைத் தந்தது.

ஈசூன் டவுன் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலை ஒன்றில் பயின்று வரும் ரஞ்சனி $150 வெள்ளி கல்வி உதவி நிதி பெற்றார். கடினமான காலத்தில் சிறு துளியும் பெரு வெள்ளம் என மனமகிழ்ச்சி அடைந்தார் திருமதி லத்திக்கா.

தமிழர் பேரவை நேற்று 120 தொடக்க நிலை மாணவர்களுக்குக் கல்வி நிதியை வழங்கியது. மொத்தம் S$25,000 பெறுமானமுள்ள கல்வி நிதி நேற்று எம்டிஐஎஸ் கழக அரங்கத்தில் வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குக் கொடுக்கப்பட்டது.

இது சென்ற ஆண்டைவிட S$10,000 வெள்ளி அதிகம். அதுமட்டுமல்லாமல் கல்வி நிதி பெறும் மாணவர்களின் குடும்பங்களின் மொத்த வருவாய் நிலையும் S$1,500லிருந்து S$2,000 ஆக உயர்த்தப் பட்டது. இதன் மூலம், நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களும் பயனடைவார்கள் எனத் தமிழர் பேரவையின் தலைவர் டாக்டர் ஆர். தேவேந்திரன் PBM கூறினார்.
“பொருளாதார மந்த நிலையின்போது மேலும் பல தமிழ் குடும்பங்களுக்குத் தமிழர் பேரவை உதவி புரிய விரும்புகிறது. “தமிழ் மாணவர்கள் கல்வியில் சிறந்து, வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்பதே எங்கள் ஆசை,’’ என்றார் டாக்டர் தேவேந்திரன்.

Bursary Awards 2009

TRC has been giving out bursaries to students from low-in-come families since 2000. For the year 2009, 120 students received about $25,000. This was double the amount given out last year.

The objective of the Bursary Awards is to reach out to the under-privileged students and give them financial assistance to motivate them to study hard and excel.

Taking into consideration the current financial crisis, TRC has increased the income from $1,500 to $2,000. This allows for middle income families to benefit too.

Apart from this Bursary Awards TRC is also looking into providing other form of assistance to Indian families who are in need.

More than 400 were present to witness the presentation at MDIS Unicampus on 3.1.2009.
Awards were presented by the union leader of the Indian Organization affiliated to TRC