சிற்பிகள் வாசகர் வட்டத்தின் அதிகாரபூர்வ தொடக்கவிழா / Launching of Sirpigal's Reading Club

சிற்பிகள் வாசகர் வட்டத்தின் அதிகாரபூர்வ தொடக்கவிழா                                                                                                  

சிற்பிகள் மன்றம் தமிழில் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க தேசிய நூலக வாரியத்தின் ஆதரவோடு ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 31-ஆம் தேதி அன்று சிற்பிகள் வாசகர் வட்டத்தை அதிகாரபூர்வமாக தொடங்கியது. தமிழர் பேரவையின் தலைவர், Dr. R. தேவேந்திரன், PBM அவர்கள் அதனை தொடங்கி வைத்தார். அவரோடு நிகழ்ச்சியில் பல சமூக தலைவர்களும் கலந்துக்கொண்டனர்.

கலைகள் வழி இந்திய இளையர்களை நல்வழி படுத்துதல், அவர்களை சமூகவேவையில் ஈடுபடுத்துதல், பரந்த உலகை புரிந்துகொண்டு முன்னேறுதல் - இவையே தமிழர் பேரவையின் துணை அமைப்பான
சிற்பிகள் மன்றத்தின் நோக்கங்கள். அதன் படி, ஒரு குறுகிய வட்டத்தில் இருந்து வெளியே வர உதவும் வாசிப்பு பழக்கத்தை மையமாகக்கொண்ட வாசகர் வட்டத்தைச் சிற்பிகள் மன்றம் தொடங்க முன் வந்தது.

"மனநலம் குன்றிய மூத்தவர்களைக்கொண்ட Sunlove Home இல்லத்தில் இந்த தொடக்கவிழாவை ஏற்பாடு செய்ததால், அது அர்த்தமுள்ள நிகழ்ச்சியானது. வெளியே செல்ல இயலாத இங்குள்ள இல்லவாசிகளை ஆடல், பாடல், நாடகம் வழி மகிழ்வித்தது மனநிறைவை அளிக்கிறது" என்று சிற்பிகள் மன்ற தலைவர் திரு குணசேகரன், PB கூறினார்.

நிகழ்ச்சியில் முத்தாய்ப்பாக உள்ளூர் எழுத்தாளர் சே.வெ. சண்முகம் எழுதிய மண்ணுக்குள் வைரம் என்ற சிறுகதையை நாடகவடிவமாக சிற்பிகள் மன்றத்தினர் படைத்தனர். நாடகத்தின் இடையே இடம்பெற்ற ஆடல், பாடல் அங்கங்களை நூற்றுக்கும் மேற்பட்ட Sunlove Home இல்லவாசிகள் கண்டு களித்தனர்.

"இந்த நிகழ்ச்சி மனநலம் குன்றியவர்களுக்கும் நமது உள்ளூர் எழுத்தாளர்களின் படைப்புகள் போய் சேர நல்லதொரு முயற்சி. சிறுகதையை நாடகவடிவமாக படைத்ததால், அவர்களால் அதை பார்க்கமுடியும், கேட்கமுடியும். உணர்ச்சிப்பூர்வமாக உணரமுடியும். ஆகையால் கதையை நன்றாக புரிந்துக்கொள்ள உதவுகிறது" என்று தேசிய நூலக வாரியத்தின் அதிகாரி K.S. மணியம் தெரிவித்தார்.

"சிறுகதையை நாடகமாக நடித்தபோது, குடும்பத்தில் உள்ள கணவன், மனைவி, பிள்ளைகள் இடையே உள்ள உறவினைப் பற்றி ஆழமாக சிந்திக்க தோன்றியது. மனைவிக்கும் மகளுக்கும் இடையே மாட்டிக்கொண்டு தவிக்கும் தந்தையின் நிலையை இன்னும் நன்றாக புரிந்துக்கொள்ள முடிந்தது" என்று நாடகத்தில் மனைவியாக நடித்த தமிழ்க்கோதை தனது கருத்தை பகிர்ந்துக்கொண்டார்.

சிற்பிகள் மன்றம் Sunlove Home ஊழியர்களையும் மறக்கவில்லை. அவர்களுக்கு தேசிய நூலக வாரியத்தின் உதவியோடு மண்ணுக்குள் வைரம் சிறுகதையை அறிமுகப்படுத்தி, அவர்களோடு இணைந்து அது பற்றி கலந்துரையாடினர். "அதனால் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் அவர்களில் பெரும்பாலோர் சிங்கப்பூர் வாழ்க்கையைப் பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள முடிந்தது" என்று Sunlove Home உதவி நிர்வாகி திரு செல்வன் குறிப்பிட்டார்.

Launching of Sirpigal's Reading Club

With National Library Board (NLB) support and TRC's support Sirpigal went a step further to inculcate the reading habit by launching its very own reading club (Sirpigal Vaasagar  Vattam). This is the first Indian organisation under the guidance of NLB to do so this year. It was launched by Dr R Theyvendran, President Tamils Representative Council on Sunday 31 August 2008, 3pm at Sunlove Home, 70 Buangkok View, Buangkok Green Medical Park.

Community service has always been one of the main objectives of Sirpigal. As such, the launch took place at Sunlove Home which provides shelter for the intellectually disabled. The highlight of the programme was a dramatisation of 'Manukkul Vairam', a short story written by our local author, the late Mr S.V. Shanmugam by Sirpigal members. Members have taken the time and effort to put together this song cum play item to help the residents to understand and enjoy the story. The drama was well enacted and brought a lot of laughter amongst the audience. This fulfils Sipigal's twin objectives of getting its members to put their talents to good use by performing for the less fortunate in our society.

The staff of Sunlove Home were also part of this reading initiative and also participated in a book discussion together with the Sirpigal members which will be facilitated by a NLB staff.