தமிழறிவு ஊட்டிய கருத்தரங்கு / சிந்திக்க வைத்த மாணவர்களின் கேள்விக் கணைகள்

தமிழ் மொழி விழா 2010

TAMIL LANGUAGE FESTIVAL   

தமிழறிவு ஊட்டிய கருத்தரங்கு
(தமிழ் முரசு, 18/4/2010)

மனம் திறந்த கேள்விகள், ஒளிவு மறைவற்ற பதில்கள், சிந்தனையைத் தூண்டும் உரைகள் என விரிந்த நோக்கோடு அமைந்திருந்தது தமிழர் பேரவையும் நியூ டவுன் தொடக்கப்பள்ளியும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த “தமிழோடு வளர்வோம்” கருத்தரங்கு.

கிட்டத்தட்ட 40 தொடக்க நிலை மற்றும் உயர் நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 500 மாணவர்கள், தம் தமிழ் ஆசிரியர்கள் புடைசூழ நேற்று எம்.டி.ஐ.எஸ் மண்டபத்தில் திரண்டனர்.

கருத்தரங்கின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருவாட்டி ஹலீமா யாக்கோப், “தமிழ்ச் சமூகத்தின் இளம் பட்டத் தொழிலர்களை உரையாற்ற வரவழைப்பது தமிழ் மாணவர் களுக்குத் தமிழ் பேச ஊக்கமளிப்பதோடு நல்லுதாரணங்களாகவும் அமைகிறார்கள்,” என்று பாராட்டினார்.

நியூ டவுன் தொடக்கப்பள்ளி மாணவர்கள் எழுதி தமிழ் ஆசிரியர் திரு மசூது தொகுத்த ‘மூக்குக்கண்ணாடி’ சிறுகதைத் தொகுப்பு நூலையும் வெளியிட்டுத் தம் உரையில் மாணவர்களின் எழுத்து ஆர்வத்தை மெச்சினார் சிறப்பு விருந்தினர்.

சிந்திக்க வைத்த மாணவர்களின் கேள்விக் கணைகள்

(தமிழ் முரசு, 18/4/2010)

தமிழோடும் தமிழாலும் வளர்ந்த இரண்டு இளம் பட்டத்தொழிலர்களின் மனம் திறந்த உரைகள் தமிழ் அல்லாத துறைகளிலும் தமிழ் எவ்வாறு பயன் படுகிறது என்று கோடிகாட்டின.

"தாய்மொழி என்று ஏன் சொல்கிறோம்? தாய் பேசிய மொழி என்பதால் அல்ல. தாய் போல் தாய்மொழியைப் பேண வோண்டும்," என்ற தட்டி எழுப்பும் வரிகளுடன் பேசினார் திரு பழனி பிள்ளை.

"ஆங்கிலம் தெரிந்த தமிழ் நோயாளிகளிடம் தமிழில் பேசும்போது அவர்களுக்கு என் மீது அதிக நம்பிக்கை ஏற்படுகின்றது. தனிப்பட்ட முறையில் உரிய சிகிச்சை வழங்கவும் தமிழ்மொழி கைகொடுத்தது," என்று தமிழுக்கும் மருத்துவத் துறைக்கும் தொடர்பு உண்டு என நிலைநிறுத்தினார் டாக்டர் ப்ரீத்தி சந்திரசேகரன்.

இத்தனை தமிழுணர்வூட்டும் வகையில் பேச்சாளர்கள் உரையாற்றியதாலோ என்னவோ, மாணவர்களுக்கும் பேச்சாளர்களுக்கும் இடையே நிகழ்ந்த கேள்வி பதில் அங்கம் மிக சுவாரசியமாக அமைந்தது.

பள்ளிகளில் தமிழுக்கு அளிக்கப்படும் அங்கீகாரம், தமிழைத் தாழ்த்திப் பேசும் பெற்றோரைச் சமாளித்தல், தமிழ் பேசுவத்ற்கும் அப்பால் தமிழ் வளர்ச்சிக்காகப் பங்காற்றுதல் போன்ற தலைப்புகளைத் தொட்டு கேள்விக் கணைகளைத் தொடுத்தனர் மாணவர்கள்.

அவ்வினாக்களுக்கு நிறைவான விடைகளையும் பேச்சாளர்கள் அளித்து கருத்தரங்கின் கருத்துக் குவியலைக்களைகட்டச் செய்தனர்.

சிறந்த கேள்விகளை கேட்ட 20 மாணவர்களுக்கு பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்டன.

கேள்வி: "மற்ற தமிழர்களோடு தமிழ் பேசினால் அவர்கள் ஆங்கிலத்திலேயே பேசுகிறார்கள். இந்த நிலைமை ஏற்படும்போது என்ன செய்வது?"

டாக்டர் ப்ரீத்தி சந்திரசேகரனி பதில்: "இது மிகவும் பரவலாக நடக்கும் ஒரு விஷயம்தான். அவர்கள் ஆங்கிலத்தில் பேசினாலும் நீங்கள் தமிழிலேயே பேசுங்கள். தமிழில் தொடர்ந்து பேசும் உங்களைப் பின்பற்றி அவர்களும் ஒருசில வார்த்தைகள் தமிழில் பேச ஆரம்பிப்பார்கள்."

கேள்வி: "பள்ளியில் தமிழ் பேசும்போது மற்ற இன மாணவர்கள் கேலி செய்கிறார்கள். என்ன செய்வது?"

டாக்டர் ப்ரீத்தியின் பதில்: "சீன மாணவர்களும் மலாய் மாணவர்களும் தங்கள் தாய் மொழிகளில் தான் பேசுகிறார்கள். அப்படி அவர்கள் கேலி செய்யும்போது 'என் தாய்மொழியைப் பேச நான் பெருமைப்படுகிறேன்' என்று சொல்லுங்கள்."

மாணவர்கள் கேட்ட கேள்விகள் பார்வையாளர்களைப் பெரிதும் வியக்க வைத்தன.

PROGRESS WITH TAMIL

In conjunction with this year’s Tamil Language Festival, Tamils Representative Council (TRC) together with New Town Primary School and Singapore Tamil Teachers Union organised a forum “Progress with Tamil” to create awareness amongst Tamil pupils on the importance of developing Tamil language skills. It was held on 17 April 2010 at MDIS Unicampus. The Guest of Honour for the event was Mdm Halimah Yacob, MP for Jurong GRC.

40 primary and secondary schools with more than 500 students participated in the event. About 150 Teachers, Parents and Community Leaders were also present. Guest Speakers were Mr Palani Pillai, CEO of Crush Advertising and Dr Pretti Chandrasekar, a Pediatrician at NUH. Highlight of the event was the number of students clamouring to ask questions and willing to speak in Tamil. About 20 students with best question were presented with cash vouchers.

The forum emphasized on the importance of spoken Tamil and explore ways to encourage and increase the usage of the language. The forum also served as a stage to launch the involvement of our Community leaders in encouraging the use of the language as a fun and modern language and that our students or youths should not shy away or be afraid in using the language.

Mdm Halimah Yacob stated that she was glad to see young Indian professionals being invited to share their experience and success amongst the students. Further it was even more heartening to note that they were speaking in Tamil and using this opportunity to encourage the students to use the language. Such exemplary and motivating factors will encourage more students who lack the confidence to speak in Tamil.