இலக்கிய கலை விழ

தமிழ் மொழி விழா 2009

பெரியவர்களுக்கு நிகராக தமிழ் முழங்கிய மாணவர்கள்
(தமிழ் முரசு, 14/4/2009)

சிங்கை கொடியைக் கையில் ஏந்திய தமிழ்த்தாய், குழல் ஊதும் கண்ணன் எனப் பல கோலங்களுக்கு மத்தியில் தனது பெயருக்கு ஏற்றார்போல் தாமரைப் பூவைக் கோலமாகப் போட்ட ஜெயராமன் செந்தாமரை கோலப் போட்டிக்கான முதல் பரிசைத் தட்டிச் சென்றார்.
மாதவி இலக்கிய மன்றத்தின் இலக்கிய கலை விழா 12ம் தேதி ஞாயிறு மாலை 6.30 மணிக்கு சிராங்கூன் சாலை பெருமாள் கோயில் பிஜிபி திருமண மண்டபத்தில் இனிய பொழுதாக்கியது.
கதை சொல்லும் போட்டி, மாறுவேடப் போட்டி, பாடல் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இனிமையான தமிழில் அருமையான படைப்புகளை வழங்கி பார்வையாளர்களின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தனர்.
கண்ணகியின் சிறப்புக் குறித்து ‘பீடு அன்று’ என்ற தலைப்பில் இலக்கியம் பேசினார் தமிழகத்தைச் சேர்ந்த அம்பை ஆ. பாலசரசுவதி.
மாதவி பற்றி பேசி, சிலப்பதிகாரம் குறித்து இன்னொரு பார்வையைத் தந்தார் திருமதி மீனாட்சி சபாபதி.
‘தமிழ்த் தாய் ஏன் கண்ணீர் வடிக்கிறாள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கவியரங்கம் சிந்திக்க வைத்தது.
இளைய தலைமுறையினருக்குப் போட்டியாக பாட்டிகளும் நடனங்கள் ஆடி அசத்தினார்கள்.
“தமிழ் பேசாத தமிழரையும் தமிழ் பேசவைக்க வேண்டும்,” என்று சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சின்னக்கருப்பன் தமிழ்ச் சங்கங்களைக் கேட்டுக் கொண்டார்.