இந்திய மாணவர்களுக்கு $850,000 உதவி

இந்திய மாணவர்களுக்கு $850,000 உதவி

(தமிழ் முரசு, 14/12/2008)

இந்திய மாணவர்களின் மேம்பாட்டுக்காக ஏறக்குறைய $850,000 தொகையை சிண்டா செலவிட உள்ளது.
இதன் மூலம் குறிப்பாக வசதி குறைந்த மாணவர்களுக்கு உதவும் வகையில் கல்வி உதவி நிதியும் பள்ளிக்குத் தேவையான பொருட்களும் வழங்கப்படும்.
இதில் $700,000 வெள்ளி கல்வி உதவி நிதியாக வழங்கப்படும். 2,000க்கும் அதிகமான மாணவர்கள் இந்த உதவி நிதியைப் பெறுவர் என சிண்டா கூறியது.
சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் தலைவரும் நிதி அமைச்சருமான தர்மன் சண்முகரத்தினம் 80 மாணவர்களுக்கு நேற்று கல்வி உதவி நிதியை வழங்கினார்.
சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளை, தமிழர் பேரவை ஆகியவற்றுடன் இணைந்து இத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் பள்ளிக் கைச்செலவு உதவி நிதி உட்பட, பல்வேறு அமைப்புகள் இத்திட்டத்திற்கு நிதி உதவி அளித்துள்ளன.
2008ல் அளிக்கப்பட்டதை விட இது, 25% அதிகம் என சிண்டா கூறியது.
அத்துடன் இந்திய மாணவருக்கு சுய தொழிலில் ஆர்வத்தை ஏற்படுத்தும் திட்டங்களையும் சிங்கப்பூர் இந்தியர் வர்த்தக தொழில் சபை இணைந்து அமைத்துள்ளது.
இதற்காக சபை $100,000 நிதியை சிண்டாவுக்கு அளித்துள்ளது.