தமிழர் பேரவையின் 48வது தேசிய தின கொண்டாட்டம் / TRC 48th National Day Celebrations – A sold out crowd

  [Photo Gallery]

 

Tamils Representative Council (TRC) and its 33 affiliate organizations with the support of more than 20 other community organizations and business enterprises celebrated the 48th National Day at the Serangoon Garden Country Club on 25 August 2013. Nearly 500 people attended the dinner. The event was graced by Guest of Honour Mr Sam Tan Ching Siong, Senior Parliamentary Secretary, Ministry of Foreign Affairs and Ministry of Culture, Community and Youth.

The event was organized to gather all Tamil based Community Organizations to demonstrate the unity of the Tamil community in their dedication and loyalty to Singapore and to raise funds for the Kandasamy Education Trust Fund.
Through this National Day dinner, TRC has raised almost $250,000 including pledges which will be channeled towards helping and supporting students from low-income families and also to motivate those who have excelled in their studies.

Mr Sam Tan congratulated TRC on its continued efforts to uplift the Tamil community and for working hand in hand with the government and the people. The Organizing Chairperson, Ms RG Thiruselvi urged more to join TRC so that it can put forth the concerns of our Tamil community and provide feedback at appropriate platforms.

It was an occasion to celebrate our nation's birthday, the achievements of our Tamil students and the spirit of volunteerism. 16 TL2 students from primary, secondary and tertiary levels were presented the Excellence Awards for
performing well in the hallmark exams. TRC had also put together a special video montage which covered the experiences of volunteers and how the spirit can be passed down to the next generation.

This year's event also included TRC Youth Wing members and volunteers who took part in the pledge taking ceremony. The celebrations for the evening continued with a cake cutting ceremony, entertaining performances by popular as well as upcoming young artistes and not forgetting the lucky draw prize presentation.

 

தமிழர் பேரவையும் அதன் 33 இணை அமைப்புகளும், மற்றும் இருபதுக்கு மேற்பட்ட சமூக, வர்த்தக அமைப்புகளின் ஆதரவுடன் கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி அன்று நமது தேசத்தின் 48-வது தேசிய தினத்தை கொண்டாடியது.

 



ஐநூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இவ்விழவிற்கு வெளியுறவு மற்றும் கலாச்சாரம், சமூகம் மற்றும் இளைஞர் அமைச்சுகளுக்கான நாடாளுமன்ற மூத்த செயலாளர் திரு சாம் டான் சின் சியோங் அவர்கள் சிறப்பு விருந்தினராக வருகையளித்து சிறப்பித்தார்.

தமிழ் சமூகம் ஒன்று சேர்ந்து நாட்டு நாளை கொண்டாடி, தங்கள் நாட்டுப் பற்றை வெளிபடுத்த இது நல்லதொரு வாய்ப்பாக அமைந்தது. முக்கியமாக தமிழர் பேரவையின் கந்தசாமி கல்வி அறநிதிக்கு நிதி சேர்க்க இவ்விழா வாய்ப்பு அளித்தது. இந்நிகழ்ச்சியின் வழி அறநிதிக்கு சுமார் இரண்டரை லட்சம் வெள்ளி சேர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிதி வழி பேரவை குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆண்டுதோறும் உபகார நிதி வழங்கி வருகிறது.

தமிழ் சமூகத்தை மேம்படுத்த தொடர்ந்து அரசாங்கத்துடனும் மக்களுடனும் கைகோர்த்து செயல்படும் பேரவையின் முயற்சிகளை சிறப்பு விருந்தினர் பாராட்டினார்.

முக்கிய தேர்வுகளில் சிறப்பாக செய்த தமிழை இரண்டாம் மொழியாக கற்கும் 16 மாணவர்களை மேலும் ஊக்குவிக்க உன்னத விருதுகள் வழங்கப்பட்டன. மேலும் தொண்டூழியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஒரு சிறப்பு படச்சுருளும் தயாரித்து காண்பிக்கப்பட்டது.

 


 

 

தமிழ் முரசு

செவ்வாய் 27 8 2013 | சிங்கப்பூர்

உச்சத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உன்னத விருதுகள்

தமிழவேல்

கடந்த ஆண்டின் ‘ஓ’ நிலைத் தேர்வில் உச்சத் தேர்ச்சி பெற்ற மாணவர்களில் ஒருவரான ஆர். கிருஷ்ணதிவ்யா (இடமிருந்து மூன்றாவது) சிறப்பு விருந்தினர் திரு சேம் டானிடமிருந்து விருதுனைப் பெறுகிறார். இடது பக்கத்தில் தமிழர் பேரவை தலைவர் டாக்டர் ஆர் தேவேந்திரன், வலது பக்கத்தில் பேரவையின் துணை தலைவர் எஸ் விவேகானந்தன்.

 

கடந்த 62 ஆண்டுகளாக சிங்கப்பூர் வாழ் தமிழர்கள், தமிழ் மொழி ஆகியவற்றின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டு வரும் தமிழர் பேரவை சிங்கப்பூரின் 48வது தேசிய தினத்தை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறப்பு தேசிய தின விருந்துக்கு ஏற்பாடு செய்தது.

சிராங்கூன் கார்டன்ஸ் கண்ட்ரி கிளப்பில் நடைபெற்ற இந்த விருந்தில் கலை நிகழ்ச்சி, அதிர்ஷ்டக் குலுக்கு, நாடகம் என தேசிய தினக் கொண்டாட்டங்கள் களைகட்டின.

நிகழ்ச்சிக்கு வந்திருந்தோர் சிங்கப்பூர் தேசியப் பாடலைப் பாடி, உறுதி எடுத்து அன்றைய தினத்தை அநுசரித்தனர். தமிழ் சமூகம் ஒன்று சேர்ந்து தேசிய நாளைக்

 கொண்டாடி, நாட்டுப் பற்றை வெளிபடுத்தும் இந்நிகழ்ச்சியாக அமைந்தது. தமிழர் பேரவையின் கந்தசாமி கல்வி அறநிதிக்கு நிதியும் திரட்டப்பட்டது.

இந்நிதி மூலம் பேரவை குறைந்த வருமான குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 200 மாணவர்களுக்கு ஆண்டுதோறும் உபகாரச் சம்பளம் வழங்கி வருகிறது. சிங்கப்பூரில் தமிழர்களும் தமிழ் மொழியும் காலூன்றி அதிகாரத்துவ மொழியாகக் காரணமாக விளங்கிய

தமிழ் முரசு நாளிதழின் நிறுவனர் தமிழவேள் கோ சாரங்கபாணி பற்றியும் அவர் ஆற்றிய சமூகப் பங்கு பற்றியும் அதிபதி அனைத்துலக நாடகக் குழுவினர் வழங்கிய நாடகத்தில் குறிப்பிடப்பட்டது. தமிழர் முன்னேற்றத்திற்காகத் தொண்டூழியர்கள் ஆற்றிய பங்கும் நினைவு கூர்ந்து சிறப்பிக்கப்பட்டது.

கடந்த ஆண்டின் பிஎஸ்எல்இ, 'ஒ' நிலை, 'ஏ' நிலை ஆகிய முக்கிய தேர்வுகளில் உச்ச தேர்ச்சி பெற்ற

 தமிழ் மாணவர்களுக்கு நேற்றைய நிகழ்ச்சியில் உன்னத விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. தமிழர் பேரவையும் அதன் இணை அமைப்புகளும் இணைந்து நடத்திய இந்த விருந்தில் கிட்டத்தட்ட 500 பேர் கலந்துகொண்டனர்.

வெளியுறவு மற்றும் கலாசார, சமூக, இளையர் அமைச்சுகளின் மூத்த நாடளுமன்ற செயலாளர் திரு சேம் டான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

சேவையின் பாதையில் - Inspiring to Serve

 

வசந்தத்தில் தாளம் - Indian Beat

 

                                                                                                                  Photo Gallery