திருக்குறள் வாழ்வாங்கு வாழ்வதற்கு ஒரு வழிகாட்டி (2ம் பதிப்பு) வெளியீட்டு விழா / Launching of THIRUKKURAL A Guide to Effective Living (2nd Edition)
திருக்குறள் வாழ்வாங்கு வாழ்வதற்கு ஒரு வழிகாட்டி (2ம் பதிப்பு) வெளியீட்டு விழா
சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் ஏற்பாட்டில் “திருக்குறள் வாழ்வாங்கு வாழ்வதற்கு ஒரு வழிகாட்டி (2ம் பதிப்பு) வெளியீட்டு விழா SUNLOVE Home-ல் ஆகஸ்டு 18ஆம் தேதி நடைப்பெற்றது.
SUNLOVE விடுதியின் மூத்த நடத்துனரான திரு வீ லின் தலைமை விருந்தினராக கலந்துக் கொண்டு திருக்குறள் பற்றி பேசியது அனைவருக்கும் ஆச்சிரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. விழாவின் சிறப்பு பேச்சாளர் திரு றொன் சந்திரன்-டட்லி அவர்கள் கண் பார்வையற்றவர் ஆனாலும் வெளியிடப்பட்ட திருக்குறள் புத்தகத்தை தன் மனைவியின் உதவியோடு படிக்க சொல்லி செவி-வழி உள்வாங்கி திருக்குறளின் பெருமைகளை பற்றி சிறப்பாக பேசினார். அது வந்திருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத் தலைவர் திரு சாமிக்கண்ணு தலைமையில் நடைப்பெற்ற நூல் ஆய்வு கலந்துரையாடலில் நூலின் ஆசிரியர் திரு.ச.இரத்தினகுமார், திரு வீ லின், திரு றொன் சந்திரன்-டட்லி, நிகழ்ச்சி தொகுப்பாளர் திருமதி மீனாட்சி சபாபதி ஆகியோர் நூலை பற்றி தங்களின் கருத்துகளை வழங்கினார்கள்.
 				திரு.வீ.கலைச்செல்வம் விழாவிற்கு தலைமையேற்று அனைவரையும் வரவேற்று  				உரையாற்றினார். விழாவில் சுமார் 200 பேர் கலந்துக் கொண்டு நூலினை  				வாங்கி விழாவிற்கு நல் ஆதரவினை வழங்கினார்கள். விழாவிலும் அதற்கு  				முன்பும் நூலின் மூலமாக கிடைத்த மொத்த நன்கொடை சுமார் $6000/-  				வெள்ளியை பெரியார் சமூக சேவை மன்றத்தின் பொருளாளர் திரு. நா. மாறன்  				அவர்கள் திரு வீ லின் அவர்களிடம் SUNLOVE விடுதிக்கு வழங்கினார்.  				இறுதியாக மன்றத்தின் செயலாளர் க.பூபாலன் நன்றி கூறினார். பெரியார்  				சமூக சேவை மன்றத்தின் சார்பாக “தந்தை பெரியார்” புகைப்படம் நினைவு  				பரிசாக திரு வீ லின் அவர்களிடம் SUNLOVE விடுதிக்கு வழங்கப்பட்டது.
| 
             
  | 
        
Launching of THIRUKKURAL A Guide to Effective Living (2nd Edition)
Thirukkural A guide to Effective  				Living (2nd Edition) was launched at the Sunlove Home on 18  				August by the Singapore Periyar Community Service Society.  				Around 200 people attended this event. The amount of $6,000 that  				was raised through the sale of the book was donated to the  				Sunlove Home.
It was a moment of pride and wonder when the Chief Guest Mr Wee  				Lin from Sunlove Home spoke about Thirukkural and when the  				keynote speaker, the visually impaired Mr Ron Chandran-Dudley  				spoke at length about the book after learning about its contents  				with his wife’s help. This was followed by a book critique  				session led by the President of Singapore Tamil Teachers' Union,  				Mr Samikannu.
.jpg)