சிங்கப்பூர் பொது நூலகங்கள் ஆதரவுடன் “மலசியா-சிங்கப்பூரில் பெரியார்” நூல் வெளியிடப்பட்டது
சிங்கப்பூர் பொது நூலகங்கள் ஆதரவுடன்
“மலேசியா-சிங்கப்பூரில் பெரியார்”
நூல் வெளியிடப்பட்டது
சிங்கப்பூர் தமிழ் மக்கள் முன்னேற்றத்திற்காக மலாயா-சிங்கப்பூரில் 1929 மற்றும் 1954ல் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்த தந்தை பெரியாரின் பிரச்சாரங்கள், பொதுக்கூட்டங்கள் பற்றிய முழு வரலாற்று தகவல்கைள திரட்டி தொகுக்கப்பட்ட “மலேசியா-சிங்கப்பூரில் பெரியார்” என்கிற நூல் மே 18-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு ஜுரோங் கிழக்கு வட்டார நூலகத்தில் வெளியிடப்பட்டது.
நூல் வெளியீட்டு விழாவை சிங்கப்பூர் பொது நூலகங்கள் ஆதரவுடன் பெரியார் சமூக சேவை மன்றமும் கவிமாலையும் இணைந்து நடத்தினார்கள். தமிழறிஞர் முனைவர் சுப.திண்ணப்பனார் நூல் ஆய்வுரையில் பெரியார் வருகையின் பயன்கள், சிங்கப்பூரில் நைடப்பெற்ற தமிழ் பாடசாலைகள் பற்றி குறிப்பிட்டார். நூலின் தொகுப்பாசிரியர் திராவிடர் கழகத் தலைவர் டாக்டர் கி. வீரமணி ஏற்புரையில் பெரியாரின் சுற்றுப்பயணத்தை நடத்திய “தமிழேவள்” கோ.சாரங்கபாணி, உ.இராமசாமி (நாடார்) போன்றவர்களால் நடத்தப்பட்ட சிங்கப்பூர் தமிழர் சீர்த்திருத்த சங்கம் பற்றியும் மற்றும் பெரியாரின் தமிழ எழுத்து சீர்த்திருத்தை சிங்கப்பூர் அரசு ஏற்று செயல்படுத்தியதையும் பாராட்டி குறிப்பிட்டார்.
விழாவில் தமிழர் பேரவைத் தலைவர் டாக்டர் ஆர்.தேவேந்திரன் PBM முதல நூலை வெளியிட சிங்கப்பூர் பள்ளி மாணவி ரேகா பெற்றுக்கொண்டார் பின்னர் கல்வியாளர்கள், வணிக பெருமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் நூலினைப் பெற்றுக் கொண்டனர்.
பெரியார் சமூக சேவை மன்றத்தின் சார்பாக வ.கலைச்செல்வம் $500 வெள்ளி நன்கொடையை ஆர்.தேவேந்திரன் PBM அவர்களிடம் தமிழர் பேரவைக்கு வழங்கினார். புதுமைத்தேனீ மா.அன்பழகன் நூல் அறிமுகவுரையாற்றி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். க.பூபாலன் நன்றி கூறினார்.