சிங்கப்பூரின் முதல் பிள்ளைத் தமிழ் நூல்

 

சிங்கப்பூரின் முதல் பிள்ளைத் தமிழ் நூல்

Dr Theyvendran praised Dr Thinnappan for all his contributions to the Society and said he showed many Tamils in Singapore the way. Dr Thevyendran also purchased 20 books at this launch for affiliates of TRC.

தமிழர் பேரவையின் தலைவர் முனைவர் ஆர்.தேவேந்திரன், PBM இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியதோடு பேரவையின் இணைந்த அமைப்புகளுக்காக 20 புத்தகங்கள் வாங்கி பாத்தென்றல் முருகடியான் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்கள்.

சிங்கப்பூரின் முதல் பிள்ளைத் தமிழ் நூல் அறிமுகம் கண்டது. தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகமும் பெக்கியோ சமூக மன்றத்தின் இந்திய நற்பணிக் குழுவும் இணைந்து ஏற்பாடு செய்ய, பெக்கியோ சமுக மன்றத்தில் 26 பிப்ரவரி 2012ல் மாலை 6 மணியளவில் விழா இனிதே துவங்கியது. செல்வி இலக்கியா மதியழகன் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடியபின் செல்வி மலர் ‘நமச்சிவாய’ என்ற பாடலுக்கு சிறப்பான தொரு நடனம் வழங்கினார்.

திரு யூசுப் ராவுத்தர் ரஜித் வரவேற்புரை வழங்கிய பின் முனைவர் தேவேந்திரன் தலைமையுரை ஆற்றினார்.

திரு விக்ரம் நாயர் முறையாக நூலை அறிமுகப் படுத்தினார். முனைவர் ஆர் தேவேந்திரன் முதல் நூலைப் பெற்றுக் கொண்டபின் முனைவர் சுப. திண்ணப்பனார் இரண்டாம் நூலைப் பெற்றுக் கொண்டார். நூலுக்கு வாழ்த்துரை வழங்கியோர் ஏற்பாட்டுக் குழுவினர் அடுத்தடுத்து நூல்களைப் பெற்றபின் முனைவர் இரத்தின வேங்கடேசன் ஆய்வுரை வழங்கினார். முனைவர் ஆர். தேவேந்திரனிடமிருந்து பார்வையாளர்கள் நூல்களை அடுத்தடுத்து வாங்கினார்கள். பொற்கிழிக் கவிஞர் நற்றமிழ் நாவலர் சொ.சொ. மீ அவர்களின் சிறப்புரை எல்லாரையும் வெகுவாகக் கவர்ந்தது. நிகழ்ச்சியில் நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டு நூலாசிரியர் பாத்தென்றலைப் பாராட்டினார்கள்.