மாதவி இலக்கிய மன்றத்தின் தமிழர் திருநாள் கலை விழா

மாதவி இலக்கிய மன்றத்தின் தமிழர் திருநாள் கலை விழா

  சிங்கப்பூரின் ‘தமிழர் தந்தை’ அமரர் கோ. சாரங்கபாணி அவர்களால் 50 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப் பட்ட தமிழர் திருநாள் தொடர்ந்து இந்த ஆண்டும் நடத்தப்பட்டது.

மாதவி இலக்கிய மன்றத்தின் சார்பாக 32வது ஆண்டாக நடத்தப்பட்ட நிகழ்ச்சி இம்மாதம் 7ஆம் தேதி சனி மாலை 6 மணிக்கு பிஜிபி திருமண மண்டபத்தில் தொடங்கியது.

முன்னதாக அமரர் தமிழவேள் கோ. சாரங்கபாணி அவர்களின் உருவப்படம் திறக்கப்பட்டு சிறுவர் களால் மலர் அஞ்சலி செய்யப்பட்டது.

சிறப்பு விருந்தினராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர். ரவீந்திரன் கலந்து கொண்டார்.

விழாவில் பள்ளிச் சிறுவர்களின் தனித்திறன் கலை நிகழ்ச்சிகள், சிங்கப்பூர் மலேசிய கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள், ஆடல் பாடலுடன் “மாதவி ஒரு காவியம்” எனும் ஒரு சிற்றுரையும் இடம்பெற்றது.